நல்லெண்ணத்தின் அடிப்படையில் மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு: ஜெ.,
நல்லெண்ணத்தின் அடிப்படையில் மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு: ஜெ.,
நல்லெண்ணத்தின் அடிப்படையில் மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு: ஜெ.,

சென்னை: ''அ.தி.மு.க., கொள்கையும், நரேந்திர மோடியின் கொள்கையும் ஒன்றாக இருக்கிறது.
சென்னையில், அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:
* நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தை பற்றி உங்கள் கருத்து? மோடியின் உண்ணாவிரதத்தை அ.தி.மு.க., ஆதரிப்பது ஏன்?
நரேந்திர மோடி, அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். அவரது நிலைப்பாடு, எங்களது கொள்கையை ஒட்டியே இருக்கிறது. மதச்சார்பற்ற நிலை, சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவை தான் எங்களது கொள்கையாக இருக்கிறது. மோடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உண்ணாவிரதத்திற்கு யாரையாவது அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அ.தி.மு.க., எம்.பி.,க்கள், மைத்ரேயன் மற்றும் தம்பிதுரை, உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.
* இது, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
அப்படி கருத முடியாது. நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தான், மோடியின் உண்ணாவிரதத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு அளிக்கிறது. இதில் தவறு இல்லை.
* வரும், பார்லிமென்ட் தேர்தலில் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா?
யூகத்தின் அடிப்படையிலான இக்கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. அதுபோன்ற நிலை ஏற்படும்போது பதிலளிக்கிறேன்.
* பெட்ரோல் விலை உயர்வு பற்றி?
இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
* உங்கள் மீது நடந்துவரும் சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரணை நடத்த, பெங்களூரு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதை பின்னடைவாக கருதுகிறீர்களா?
அவ்வாறு கருதவில்லை. எனது வழக்கறிஞர்கள், இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு வருகின்றனர். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
* இவ்வழக்கு விசாரணைக்காக, அடுத்த மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜராவீர்களா?
அக்டோபர் 20ம் தேதி என்று தேதி குறித்திருக்கிறார்கள். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், பல சந்தர்ப்பங்களில் கோர்ட்டுகளுக்கு சென்றுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.