/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/"பிட் நோட்டீஸ்' கலாசாரம்கலக்கத்தில் வி.ஐ.பி.,க்கள்"பிட் நோட்டீஸ்' கலாசாரம்கலக்கத்தில் வி.ஐ.பி.,க்கள்
"பிட் நோட்டீஸ்' கலாசாரம்கலக்கத்தில் வி.ஐ.பி.,க்கள்
"பிட் நோட்டீஸ்' கலாசாரம்கலக்கத்தில் வி.ஐ.பி.,க்கள்
"பிட் நோட்டீஸ்' கலாசாரம்கலக்கத்தில் வி.ஐ.பி.,க்கள்
ADDED : செப் 20, 2011 09:35 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தேர்தலை தொடர்ந்து, 'பிட் நோட்டீஸ்'
அச்சடித்து வெளியிடுவதால், வி.ஐ.பி.,க்கள் கலக்கத்தில் உள்ளனர் .
கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் இரண்டு
நாட்களுக்கு முன், சமுதாயத்தில் உள்ள வி.ஐ.பி.,க்களை தாக்கி
அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டிஸ், வீடு வீடுடாக கொடுக்கப்பட்டது.
வி.ஐ.பி.,க்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள், கட்சியினர் அதிர்ச்சி
அடைந்தனர். மேலும், சமுதாயத்தை குழப்பும் வகையிலும், அந்தந்த சமுதாய
அமைப்பின் பெயரில் பிட் நோட்டீஸ்களும் வெளியாகின. தற்போது வரும் உள்ளாட்சி
தேர்தலிலும் இதுபோன்று பிட் நோட்டீஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் யார்
தலை உருளுமோ என்ற அச்சத்தில் வி.ஐ.பி.,க்கள் உள்ளனர். இதை கட்டுப்படுத்த
போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.