Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மனவளக்கலை மையம் துவக்கம்

மனவளக்கலை மையம் துவக்கம்

மனவளக்கலை மையம் துவக்கம்

மனவளக்கலை மையம் துவக்கம்

ADDED : ஜூலை 28, 2011 09:50 PM


Google News
திருப்பூர் : மங்கலம் மனவளக்கலை யோகா தவமையத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, தவ மைய வளாகத்தில் நடந்தது. திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை துணை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். எம்.எல்.ஏ., பரமசிவம் பேசுகை யில், ''வாழ்வில் அமைதி பெற யோகா பயிற்சி அவசியம். மிகவும் கடினமானதாக இல்லாமல், செய்வதற்கு மிக எளி தாக இருப்பதால் அனைத்து வயதினரும் சுலபமாக செய்ய முடியும். தியான பயிற்சிகளால் மனம் மிகவும் அமைதியடையும்; எண்ணங்கள் ஒழுங்குபடும்,'' என்றார். முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி நடந்தது. மங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், மங்கலம் ஊராட்சி தலைவர் பாலாமணி, திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் துணை தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை யோகா பயிற்சி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி மாணவியருக்கு அளிக்கப்பட்டது. நினைவாற்றல் பெருகவும், பண்புகள் அதிகரிக்கவும், அப்பயிற்சி அளிக்கப்பட்டது. உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர்கள் சந்திரவதனா, பிருந்தாதேவி, நாராயணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us