Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாவிற்கு சுவையூட்ட, "நட்ஸ் அண்டு பேக்ஸ்'

நாவிற்கு சுவையூட்ட, "நட்ஸ் அண்டு பேக்ஸ்'

நாவிற்கு சுவையூட்ட, "நட்ஸ் அண்டு பேக்ஸ்'

நாவிற்கு சுவையூட்ட, "நட்ஸ் அண்டு பேக்ஸ்'

ADDED : செப் 18, 2011 09:37 PM


Google News
திருப்பூர் : நாவிற்கு சுவையூட்டும் விதவிதமான கேக் ரகங்களை விற்பனை செய்யும் 'நட்ஸ் அண்டு பேக்ஸ்' பேக்கரி, திருப்பூர் கே.எஸ்.சி., ஸ்கூல் வீதியில் நேற்று திறக்கப்பட்டது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், பேக்கரியை திறந்து வைத்தார். மணி அப்பேரல்ஸ் அண்டு டாலர் அப்பேரல்ஸ் நிர்வாகிகள் பாலசுப்ரமணியம் மற்றும் ராம மூர்த்தி ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்; நாகப்பட்டிணம் உமா குரூப் ஆப் கம்பெனீஸ் நிறுவனர் குப்பு சாமி பெற்றுக்கொண்டார். 'நட்ஸ் அண்டு பேக்ஸ்' விற்பனை மற்றும் டைனிங் ஹால் பிரிவை, திருப்பூர் பிரேம் குரூப் ஆப் கம்பெனீஸ் நிர்வாகி துரைசாமி திறந்து வைத்தார். ஸ்ரீசக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம், கேக்ஸ் தயாரிப்பு பிரிவை திறந்து வைத்தார். ஜெனரல் டெக்ஸ்டைல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கார்த்திகேயன், சுதாமா ஹொசைரீஸ் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ரோடு லைன்ஸ் ஜீவானந்தம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். 'நட்ஸ் அண்டு பேக்ஸ்' உரிமையாளர்கள் ரவி ராமலிங்கம் மற்றும் ரவி அரவிந்தன் கூறியதாவது: நாவிற்கு சுவையூட்டும் கேக் ரகங்களை வழங்க வேண்டும் என்பதை தாரகமந்திரமாக கொண்டு 'நட்ஸ் அண்டு பேக்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. பர்கர், பீசா, கேக், ஸ்ட்ராபெர்ரி கேக், விதவிதமான பன்களை, வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் தயாரிக்கிறோம். ஆர்டரின் பேரிலும் அனைத்துவித பதார்த்தங்களும் தயாரித்து வழங்கப்படும். மாணவர்களுக்கு என்றே பிரத்யேகமாக 'மாணவர் ஸ்பெஷல் கேக்' விற்பனைக்கு உள்ளது; மாணவர்களுக்கு மட்டும் சலுகை விலையில் வழங்கப்படும். கிராமத்தை விரும்புவோர் அமர்ந்து உண்பதற்காக திண்ணை அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தேவையை கருத்தில் கொண்டு, நாவிற்கு இனிய, உண்ண உண்ண திகட்டாத பதார்த்தங்களை சாப்பிடும் வாடிக்கையாளர்கள், கருத்துக்களை தெரிவிக்கும் வகையில், பேக்கரி முகப்பில் மணி கட்டப்பட்டுள்ளது; அம்மணியை ஒலிக்கச் செய்து வாடிக்கையாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us