/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆம்புலன்ஸ் வர தாமதம்: மக்கள் சாலை மறியல்ஆம்புலன்ஸ் வர தாமதம்: மக்கள் சாலை மறியல்
ஆம்புலன்ஸ் வர தாமதம்: மக்கள் சாலை மறியல்
ஆம்புலன்ஸ் வர தாமதம்: மக்கள் சாலை மறியல்
ஆம்புலன்ஸ் வர தாமதம்: மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 26, 2011 12:59 AM
மத்தூர்: மத்தூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க, 108 ஆம்புலன்ஸ்
தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை
சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூரை அடுத்த அத்திகானூரை சேர்ந்தவர்கள்
கோபால் (30), சுப்பிரமணி (32). இருவரும், சென்னையில் உள்ள ஸ்வீட் கடையில்
மாஸ்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், இருவரும்
சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில், இருவரும்
ஒரே பைக்கில் அத்திகானூரில் இருந்து மத்தூர் நோக்கி சென்றனர். கன்னன்டஅள்ளி
அருகே சென்ற போது, வந்தவாசியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு பஸ்
பைக் மீது மோதி மோதியது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த
காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன்
செய்தனர். பர்கூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், 108 ஆம்புலன்ஸ்
கன்னன்டஅள்ளிக்கு 3 மணிக்கு மேல்தான் வந்தது. ஆத்திரமடைந்த
காயமடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணகிரி-
திருவண்ணாமலை தேசியö நடுஞ்சாலையில் கன்னன்டஅள்ளியில் ஆம்புலன்ஸை சிறை
பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மத்தூர் இன்ஸ்பெக்டர்
ராஜ்குமார், சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல்
போராட்டத்தை கைவிட்டனர். இதனால் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில்
போக்குவரத்து பாதிப்படைந்தது.