Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கடவுளை இழிவுபடுத்தி போஸ்டர்: சிதம்பரம் ஆதரவாளர் மீது புகார்

கடவுளை இழிவுபடுத்தி போஸ்டர்: சிதம்பரம் ஆதரவாளர் மீது புகார்

கடவுளை இழிவுபடுத்தி போஸ்டர்: சிதம்பரம் ஆதரவாளர் மீது புகார்

கடவுளை இழிவுபடுத்தி போஸ்டர்: சிதம்பரம் ஆதரவாளர் மீது புகார்

ADDED : செப் 17, 2011 07:07 PM


Google News
சென்னை : இந்துக் கடவுளை இழிவுபடுத்தி, போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்த, சிதம்பரம் ஆதரவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பிறந்த நாள், கடந்த இரு தினங்களுக்கு முன், காங்கிரசைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது.

பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அருகில், விளம்பர போர்டு வைத்துள்ளனர். இதில், இந்துக் கடவுள் கிருஷ்ணரின் உருவப்படத்தில், சிதம்பரத்தின் படம் பொருத்தி வைத்துள்ளனர். இதற்கு, இந்து மக்கள் கட்சி சார்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.போஸ்டர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து மக்கள் கட்சி மாநில அலுவலக செயலர் குமரவேல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'காங்கிரஸ் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள போஸ்டர், இந்து கடவுள்களையும், இந்துக்களின் உணர்வையும் புண்படுத்துவது போன்றுள்ளது. விளம்பரம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us