Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மீண்டும் "புத்துயிர்' பெறும் மழைநீர் சேகரிப்பு திட்டம்

மீண்டும் "புத்துயிர்' பெறும் மழைநீர் சேகரிப்பு திட்டம்

மீண்டும் "புத்துயிர்' பெறும் மழைநீர் சேகரிப்பு திட்டம்

மீண்டும் "புத்துயிர்' பெறும் மழைநீர் சேகரிப்பு திட்டம்

ADDED : ஆக 03, 2011 10:36 PM


Google News
திருப்பூர் : மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தொட்டி அமைத்தால் மட்டுமே கட்டட அங்கீகாரம் வழங்கப்படும். இல்லையெனில், அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2001ல் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க., அரசு, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தது. பொதுமக்கள் அனைவரது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், அரசு கட்டடங்கள், அரசு அலுவலகங்களில் கூட, அவசியம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளதா என உள்ளாட்சித்துறை அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர். மழைநீர் தொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளின் கதவுகளில் அடையாளமாக 'மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ள வீடு' என்ற மஞ்சள் நிற அட்டை ஒட்டப்பட்டது.அதன் பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க., மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஓரங்கட்டியது. தற்போது மீண்டும் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கும்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:மழை நீர் சேகரிப்பு திட்டத்தை எத்தனை வீடுகள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன; அதற்கான வரி விதிப்பு எவ்வளவு என்பதை கணக்கெடுக்கும்படி கூறியுள்ளனர். கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக் கான தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா; கட்டமைப்புக்கு ஏற்றபடி தான் தொட்டி அமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்; மழைநீர் தொட்டி அமைக்காவிட்டால், அந்த விண்ணப்பத்துக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்.இதுவரை தொட்டி அமைக்காதவர்கள் அமைத்துக் கொள்ள குறிப்பிட்ட காலம் ஒதுக்க வேண்டும். அதன் பிறகும் தொட்டி அமைக்கவில்லை என்றால், கட்டட உரிமையாளர்கள் வருமானத்துக்கு ஏற்ப அபராதம் விதிக்க வேண்டும். சொத்து வரி விதிக்கும் முன், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தண்ணீர் வழிந்தோடும் பரப்பளவுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைக்காமல் இருந்தால், அதிகாரிகள் ஆய்வுக்கு முன், மழைநீர் தொட்டி கட்டாயம் அமைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us