Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வயதான தம்பதியிடம் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்

வயதான தம்பதியிடம் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்

வயதான தம்பதியிடம் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்

வயதான தம்பதியிடம் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்

ADDED : செப் 28, 2011 12:42 AM


Google News

திசையன்விளை : உவரியில் வயதான தம்பதியிடம் நெல்லிக்காய் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து 50 பவுன் தங்க நகைகள் அபேஸ் செய்து ஓடிய வேலைக்கார பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உவரி நூலகம் எதிரே வசித்து வருபவர் கிரகோரி (74). இவரது மனைவி புவனேஸ்வரி (70). இவர்களுடைய மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் தனியாக உவரியில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை அவர்களுக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்ய பெண் ஒருவரை நியமித்தனர். இவர் தன்னை பங்கஜம் எனவும், சொந்த ஊர் தென்காசி என்றும் கூறினாராம்.



இந்நிலையில் இரவு 9 மணிக்கு இருவருக்கும் வேலைக்கார பெண் நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தாராம். இதில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் கிரகோரி, புவனேஸ்வரி இருவரும் மயக்கமடைந்தனர். இவர்களின் மகன் சென்னையிலிருந்து இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு போன் செய்தாராம். அப்போது வேலைக்கார பெண் போனை எடுத்து அவர்கள் தூங்கி கொண்டிருக்கின்றனர் என்று கூறினாராம். மீண்டும் போன் செய்தபோதும் அதே வார்த்தையை கூறியதால் சந்தேகமடைந்த அவரது மகன் பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் கூறி தனது தாய், தந்தையரை பார்க்க சொன்னாராம். இந்த நேரத்தில் வேலைக்கார பெண் புவனேஸ்வரியின் கழுத்தில் இருந்த 31பவுன் தாலி செயின் மற்றும் செயின், வளையல்கள் உட்பட சுமார் 50பவுன் நகைகளை கழட்டி கொண்டு வெளியேறிவிட்டாராம்.



உறவினர்கள் வந்து பார்த்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். இவர்கள் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.



இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி விஜயேந்திரபிதரி, ஏடிஎஸ்பி சொக்கலிங்கம், வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 பவுன் நகைகளுடன் மாயமான இளம் பெண் ரோஸ்கலர் பூபோட்ட சேலையும், 9.45 மணிக்கு ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் தனியார் பஸ்சில் சென்றதாகவும் அருகில் இருந்தவர்கள் பார்த்ததாக கூறுகின்றனர்.நகையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us