தனி நபர் விமர்சனம் அதிர்ச்சியாக இருக்கிறது; திருமாவின் இன்றைய குறி இபிஎஸ்!
தனி நபர் விமர்சனம் அதிர்ச்சியாக இருக்கிறது; திருமாவின் இன்றைய குறி இபிஎஸ்!
தனி நபர் விமர்சனம் அதிர்ச்சியாக இருக்கிறது; திருமாவின் இன்றைய குறி இபிஎஸ்!

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (செப் 25), “தனிநபர் தாக்குதலில் இபிஎஸ் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசுகையில், ''செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை'' என விமர்சனம் செய்து இருந்தார்.
இது குறித்து நிருபர்களிடம் திருமாவளன் கூறியதாவது: இபிஎஸ் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் இருந்தவர். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். இந்த பொறுப்பின் அடிப்படையிலும், அவருடைய அனுபவத்தின் அடிப்படையிலும் சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது.
அவர் இதுபோன்ற தனிநபர் மீது விமர்சனங்களை செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அவருக்கு, அவருடைய அரசியலுக்கும் உகந்தது அல்ல என்று நான் கருதுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.