/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் உள்ளாட்சி பதவிக்கு ஆயிரத்து 633 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 20 பேரும், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு எட்டு பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்டனர் பதவிக்கு 1,151 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 260 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 112 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று காலை முதல் அமாவாசை துவங்கியதால், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு அடைந்தது. இன்றும் அமாவாசை தொடர்வதால், முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரையில் 2 ஆயிரத்து 378 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக கிராம பஞ்சாயத்து வார்டு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த காலங்களை விட இந்த தேர்தலில் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் நடந்துள்ளது.