தேர்தலில் போட்டி: காங்., சின்னத்திற்கு சிக்கல்:வாசன் கோஷ்டியினர் அதிருப்தி
தேர்தலில் போட்டி: காங்., சின்னத்திற்கு சிக்கல்:வாசன் கோஷ்டியினர் அதிருப்தி
தேர்தலில் போட்டி: காங்., சின்னத்திற்கு சிக்கல்:வாசன் கோஷ்டியினர் அதிருப்தி
ADDED : அக் 02, 2011 11:51 PM
சிவகங்கை:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்., கட்சி சின்னம் பெறமுடியாமல் சிவகங்கையில் வாசன் ஆதரவாளர்களை, சிதம்பரம் கோஷ்டியினர் புறக்கணிக்கின்றனர்.மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்., கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு வாசன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை 3 மணிக்குள், கட்சி சின்னத்தில் நிற்பதற்கான ஒப்புதல் கடிதத்தை தலைமையிடம் பெற்று, தேர்தல் அலுவலரிடம் வழங்கவேண்டும்.
அதிருப்தி: இதற்காக, காரைக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள சாருலதா, திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு கே.கே.பாலசுப்பிரமணியம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அயோத்தி உள்ளிட்ட வாசன் கோஷ்டியினர், அனுமதி கடிதத்தை பெற கட்சி மேலிடத்தில் முயற்சித்து வருகின்றனர்.ஆனால், சிதம்பரம் கோஷ்டியினர் இதற்கு முட்டுக்கட்டை போடுவதால், அனுமதி கடிதம் நேற்று மாலை வரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், வாசன் கோஷ்டியினர் அதிருப்தியில் உள்ளனர்.


