இன்று சிறையிலிருந்து வெளியேறுகிறார் அன்னா?
இன்று சிறையிலிருந்து வெளியேறுகிறார் அன்னா?
இன்று சிறையிலிருந்து வெளியேறுகிறார் அன்னா?
புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் குழுவினருக்கும், மத்திய அரசிற்கும் இடையே நடந்த பேச்சசுவார்த்தையில் சுமூக நிலை எட்டியதை தொடர்ந்து ஹசாரே திகார் சிறையிலிருந்து இன்று வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- லோக்சபாவில் சிதம்பரம் பேச்சு , உண்ணாவிரதத்தை எந்த இடத்தில் நடத்த அனுமதிப்பது என்பது குறித்து, டில்லி போலீசார் ஹசாரேயுடன் பேச்சு நடத்தி முடிவு செய்வர் - உள்துறை செயலர் பிள்ளை. ஹசாரேயுடன் டில்லி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், உண்ணாவிரத போராட்டத்தை மூன்று வாரங்கள் நடத்துவதற்கு அனுமதிவழங்க முன்வந்துள்ளனர். உண்ணாவிரதம் போராட்டம் ராம்லீலா மைதானத்தில் நடத்துவதற்கு ஹசாரே குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த மைதானம் 25 ஆயிரம் பேர் வரை அமரும் வசதி கொண்டது. அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக, நேற்று இரவு மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.


