உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: தா.பாண்டியன்
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: தா.பாண்டியன்
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: தா.பாண்டியன்
ADDED : செப் 27, 2011 05:23 PM
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இடபங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் அளித்த பேட்டியில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர எடுக்கப்பட்ட மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டது. இதனையடுத்து அ.தி.மு.க.,வுடனான கூட்டணி முறிந்து விட்டது. <உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும். இதற்காக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.