Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தெலுங்கானா காங்., தலைவர்களுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

தெலுங்கானா காங்., தலைவர்களுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

தெலுங்கானா காங்., தலைவர்களுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

தெலுங்கானா காங்., தலைவர்களுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

UPDATED : ஜூலை 28, 2011 02:13 AMADDED : ஜூலை 28, 2011 01:07 AM


Google News
Latest Tamil News

புதுடில்லி : தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்களுடன் , ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், டில்லியில் நேற்று இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்தினார்.

ஆந்திராவில் தனித்தெலுங்கானாவை வலியுறுத்தி, அப்பகுதி காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், தெலுங்கானா பகுதி காங்கிரஸ் பிரதிநிதிகளை, டில்லியில் நேற்று சந்தித்து, தெலுங்கானா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., விவேகானந்த், அம்மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பொன்னால லட்சுமையா ஆகியோர், குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேசினர்.

அப்போது, தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், தெலுங்கானா மாநிலத்தின் ஒரு பகுதியாக, ஐதராபாத் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், குலாம் நபி ஆசாத்திடம் விளக்கியதாக, அக்கட்சி வட்டாரங்கள தெரிவித்துள்ளன. ஆந்திர கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசவும் குலாம் நபி ஆசாத் திட்டமிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us