/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் ஊரக வளர்ச்சி, மகளிர் திட்ட இயக்குனர்கள் மாற்றம்சேலம் ஊரக வளர்ச்சி, மகளிர் திட்ட இயக்குனர்கள் மாற்றம்
சேலம் ஊரக வளர்ச்சி, மகளிர் திட்ட இயக்குனர்கள் மாற்றம்
சேலம் ஊரக வளர்ச்சி, மகளிர் திட்ட இயக்குனர்கள் மாற்றம்
சேலம் ஊரக வளர்ச்சி, மகளிர் திட்ட இயக்குனர்கள் மாற்றம்
ADDED : ஜூலை 27, 2011 01:29 AM
சேலம்: சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றி வரும், திட்ட இயக்குனர்கள், செயற்பொறியாளர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றிய வரதராஜன், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மகளிர் திட்ட அலுவலர் ஐயப்பன், ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், சேலம் செயற்பொறியாளர் செல்வராஜ், நாகப்பட்டினத்துக்கும், கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சுந்தரராஜன், சேலம் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மகளிர் திட்ட அலுவலராக, திருவாரூர் மகளிர் திட்ட அலுவலர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெங்கடேஷ், சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.