Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பெயிலில் வெளிவந்த பிரபல ரவுடி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

பெயிலில் வெளிவந்த பிரபல ரவுடி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

பெயிலில் வெளிவந்த பிரபல ரவுடி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

பெயிலில் வெளிவந்த பிரபல ரவுடி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

ADDED : ஆக 09, 2011 01:14 AM


Google News
திருச்சி: பெயிலில் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில், பிரபல ரவுடி குணா மீண்டும் திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மண்ணச்சல்லூரை சேர்ந்தவர் குணா. என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட, பிரபல ரவுடி முட்டை ரவியின் வலதுக்கரமாக செயல்பட்டார். இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மட்டுமே திருச்சி மாவட்ட பிரபல ரவுடிகள் பட்டியலில் எஞ்சிருப்பவர். மற்றவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டோ, என்கவுன்டர்கள் மூலமாக பிரபல ரவுடிகள் பட்டியலிருந்து காணாமல் போய்விட்டனர்.திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணாவுக்கு, பல்வேறு வழக்குகளில், கடந்த மே 6ம் தேதி பெயில் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த நிமிடத்தில் குணா கைது செய்யப்பட்டார்.ஸ்ரீரங்கம், உறையூர் போலீஸ் ஸ்டேஷன்களில் இரண்டு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டது. உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் குணா கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.குணா மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தினை, சென்னை அறிவுரை குழுமத்தில் (அட்வைஸரி போர்டு) நிராகரித்தது. இறுதியாக பதிவுச் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளுக்கும் பெயில் கோரப்பட்டது.விசாரணைக்காக, திருச்சி முதன்மை நீதிமன்ற நீதிபதி கோகுலதாஸ் முன்னிலையில், குணா நேற்று காலை ஆஜரானார். நேற்று மதியம் 2.30 மணியவளில் குணாவுக்கு ஃபெயில் ஆர்டர் வழங்கப்பட்டது.ரவுடி குணாவின் வருகையையொட்டி, திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மப்டியிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பெயில் வாங்கியவுடன், குணாவை கைது செய்ய போலீஸார் தயாராக இருந்தனர்.'நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் ஒன்று கூடி தகராறு செய்யலாம்' என்பதால், குணாவை சிறைவாசலில் கைது செய்ய போலீஸார் முடிவெடுத்தனர். குணா தரப்பு வக்கீல்கள் மற்றும் போலீஸார் மத்தியச்சிறை வாசலில் குவிந்தனர்.திடீர் திருப்பம்: கடந்த 2004ம் ஆண்டு திருச்சி அருகே மணிகண்டத்தில், சேட்டு, டிங்கி, சுரேஷ் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முட்டை ரவி, குணா உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக உள்ளனர்.கொலைச் செய்யப்பட்ட சுரேஷ், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால், குணா மீது தீண்டாமை ஒழிப்பு வழக்கும் பாய்ந்தது. திருச்சி தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றத்தில், வரும் 26ம் தேதி குணா ஆஜராக சம்மன் (பி.டி., வாரன்ட்) அனுப்பப்பட்டது.

இது சிறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் வாரன்ட். குணாவுக்கு ஃபெயில் வழங்கி விட்டதால், சிறையில் அடைப்பதா? வெளியில் அனுப்புவதா? என்று சிறை அதிகாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக, ரவுடி குணா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us