கரூர் பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
கரூர் பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
கரூர் பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
UPDATED : செப் 05, 2011 12:32 PM
ADDED : செப் 05, 2011 09:53 AM
கரூர்: முன்னாள் இந்திய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் அருகே லிட்டில் ஏஞ்சல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மற்றொரு பள்ளியில் நடந்த விழாவில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கி நடச்செய்தனர்.
இதே போன்று பரணிபார்க் அருகே உள்ள அன்பாலயத்தில் ஏழை, எளிய இயலா குழந்தைகளுக்கு பாடல்நூல் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


