ADDED : ஆக 19, 2011 11:00 PM
தேனி:உத்தமபாளையத்தில் புறாக்கூண்டில் இருந்து முகம்மதியர் கிழக்கு தெரு
வழியாக கரிசல்களம், உச்சிமலை செல்லும் பாதையோரம் பெரியாற்றின் கரையில்
தடுப்புச்சுவர் இல்லை. ரோட்டோரம் தடுப்புச்சுவரில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தந்துள்ளனர்.


