Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சுதந்திர தினத்தன்று எழும்பூரில் இருந்து கிண்டி வரை 156 ஆண்டு பாரம்பரியம்மிக்க நீராவி ரயில் இயக்கம்

சுதந்திர தினத்தன்று எழும்பூரில் இருந்து கிண்டி வரை 156 ஆண்டு பாரம்பரியம்மிக்க நீராவி ரயில் இயக்கம்

சுதந்திர தினத்தன்று எழும்பூரில் இருந்து கிண்டி வரை 156 ஆண்டு பாரம்பரியம்மிக்க நீராவி ரயில் இயக்கம்

சுதந்திர தினத்தன்று எழும்பூரில் இருந்து கிண்டி வரை 156 ஆண்டு பாரம்பரியம்மிக்க நீராவி ரயில் இயக்கம்

ADDED : ஆக 13, 2011 12:50 AM


Google News

சென்னை : பாரம்பரியமிக்க, 156 பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில், வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை நகர மக்களுக்காக இயக்கப்படவுள்ளது.

இந்தியன் ரயில்வேயில், பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் 'எக்ஸ்பிரஸ் லோகோ'. 'இஐஆர் 21' எனப்படும் இந்த பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில், கடந்த 1909ம் ஆண்டு வரை சேவை செய்தது. அதன் பின் ஓய்வு பெற்று, கடந்த 100 ஆண்டுகளாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.



கடந்த ஆண்டு இந்த பழமை வாய்ந்த ரயில், சென்னை, பெரம்பூர் ரயில் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சீர்படுத்தப்பட்டது. பின்னர், இந்த நீராவி இன்ஜின் ரயில், கடந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பேசின் பிரிட்ஜில் இருந்து ஆவடி வரை இயக்கப்பட்டடது. பொதுமக்கள், பழமை வாய்ந்த இந்த ரயில் இன்ஜினை உற்சாகமாக வரவேற்று, கண்டு களித்தனர்.



இந்நிலையில், வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, மீண்டும் இந்த பழமை வாய்ந்த ரயில், சென்னை நகரவாசிகளை உற்சாகப்படுத்த வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து கிண்டி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில், காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிண்டிக்கு 12.30 மணியளவில் சென்றடையும். இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us