எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீஸ் எப்.ஐ.ஆர்
எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீஸ் எப்.ஐ.ஆர்
எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீஸ் எப்.ஐ.ஆர்
ADDED : ஆக 11, 2011 02:23 AM

பெங்களுரூ: கர்நாடகா மாநிலத்தில் நீர்ப்பாசனத்திட்டத்தில் நிதி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது லோக்ஆயுக்தா போலீசார் முதல்தகவல் அறிக்கை (எம்.ஐ.ஆர்.)பதிவுசெய்துள்ளனர்.
மேலும் மூன்று ஊழல் வழக்குகளும் இவர் மீது பதிவு செய்யப்பட்டுளளதால், இது தொடர்பாக எடியூரப்பா வரும் 27-ம் தேதி லோக் ஆயுக்தா கோர்டில் ஆஜராகலாம் என தெரிகிறது. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா ஆட்சி செய்த போது அப்பர் பஹதாரா நீர்ப்பாசனத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் ஓய்.எஸ்.வி.தத்தா என்பவர் அளித்த புகாரில், அப்பர் பஹதாரா நீர்ப்பாசனத்திட்டத்திற்காக ஆர்.என்.எஸ்.ஜோதி என்ற நிறுவனத்திற்கு மிக குறைந்த தொகையான ரூ. 1,033 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் பெற்று தந்ததற்கு கைமாறாக, எடியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நடத்தும் இரு நிறுவனங்களுக்கு ரூ.13 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. தவிர ஷிமோகா மாவட்டத்தில் எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் பிரிரானா சமூக,கல்வி அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடியும் கைமாறியுள்ளது.இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இது குறித்து லோக் ஆயுக்தா சிறப்பு கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த , லோக் ஆயுக்தா கோர்ட் , லோக் ஆயுக்தா காவல்துறை விசாரணை நடத்துமாறு காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி உத்தரவிட்டது. விசாரணையில் ரூ. 10 கோடி , அறக்கட்டளை பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நீர்ப்பாசனத்திட்டத்தில் முறைகேடு செய்தது, அறக்கட்டளைக்கு லஞ்சப்பணம் , நன்கொடையாக பெற்றது ஆகிய புகார்களின் பேரில் லோக்ஆயுக்தா காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கசாமி நாயக், எடியூரப்பா உள்ளிட்ட 14 பேர் மீது,லஞ்ச ஒழிப்பு தடுப்புச் சட்டம் 158(3) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளார். வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி லோக் ஆயுக்தா கோர்டில் ஆஜராகுமாறு எடியூரப்பா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி வைகப்பட்டுள்ளது.