/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனைகூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி முறை : வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
ராசிபுரம்: 'அதிக மகசூல் தரக்கூடிய திருந்திய நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தி, கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம்' என, எலச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார்.
நடவு வயலை, லேசர் சமன் செய்யும் கருவி கொண்டு, துல்லியமாக சமன் செய்ய வேண்டும். நெல் நடவு செய்ய இடைவெளியை சரியாக பராமரிக்க மார்க்கர் கருவியை பயன்படுத்த வேண்டும். 22.5க்கு 22.5 செ.மீ., இடைவெளியில் மார்க்கர் கருவியை உபயோகிப்பதன் மூலம், சதுர நடவாக நடவு செய்ய வேண்டும். குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்து, நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். ஒரு இன்ச் அல்லது, 2.5 செ.மீ.,க்கு அதிகமாக நீர் நிறுத்தக் கூடாது. கோனாவீடர் களையெடுக்கும் கருவியைக் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை என, நான்குமுறை களைகளை அழுக்கி சேற்றை கலக்குதல் வேண்டும். அதனால், வேர்களின் வளர்ச்சி அதிகமாகி, அதிக அளவில் தூர்கள் வெடிக்கும். ஊட்டச்சத்துகளை உபயோகிக்கும் திறன் அதிகரிக்கும். மேலும், மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து வேரின் துரித வளர்ச்சிக்கு உதவுகிறது. இலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவையான தழைச் சத்தினை மேல் உரமாக இட வேண்டும்.