/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் அவ்வையார் கல்லூரியில் மாணவர் தினம்காரைக்கால் அவ்வையார் கல்லூரியில் மாணவர் தினம்
காரைக்கால் அவ்வையார் கல்லூரியில் மாணவர் தினம்
காரைக்கால் அவ்வையார் கல்லூரியில் மாணவர் தினம்
காரைக்கால் அவ்வையார் கல்லூரியில் மாணவர் தினம்
ADDED : ஆக 05, 2011 04:14 AM
காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் தின
விழா நடந்தது.கல்லூரி முதல்வர் தமிழரசி வரவேற்றார்.
நாஜிம் எம்.எல்.ஏ.,
தலைமை தாங்கினார். கலெக்டர் பிராங்களின் லால்டின்குமா, சப் கலெக்டர்
அசோக்குமார் முன்னிலை வகித்தனர். மாணவிகள் ஹனிப்பாத்திமா,
தியானிகாபிரியதர்ஷினி ஆகியோர் காமராஜரின் சிறப்புகள் குறித்து
விளக்கினர்.மாணவிகளுக்கு பரிசளித்து கலெக்டர் பிராங்க்ளின் லால்டின்குமா
பேசியதாவது:மாணவர்கள் படிக்கும் காலத்தில் பேச்சு திறமை, எழுத்து திறமை
உள்ளிட்டவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்
போது, பெரிய தொழில் நிறுவனங்கள் பேச்சு, நடை, உடை, திறமைகளை
கணக்கிடுகின்றனர். அப்போது இந்த திறமைகள் மிக அவசியமாக தேவைப்படும்.மாணவ
மாணவிகள் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். புதுச்சேரி
மாநில பெண்கள் வங்கி பணியிடங்கள், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி,
போலீசில் கூட தேர்வாகியுள்ளனர். அதேபோல் இந்திய ஆட்சி பணி தேர்வுகள்
குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் சிவில்
சர்வீஸ் தேர்வுகள் குறித்தும், அதன் பாடத் திட்டங்கள் குறித்தும் கல்லூரி
காலத்திலேயே மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பெண்கள் கல்வி பெற்றால்
குடும்பம் மட்டுமின்றி நாடே முன்னேறும்.இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்
சிவமாதவன் நன்றி கூறினார்.