எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்
எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்
எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு 212 கோடி ரூபாய் வினியோகம்
ADDED : ஆக 05, 2011 02:12 AM
புதுடில்லி: 'ராஜிவ்காந்தி தேசிய உதவித் தொகை திட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, 212 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என, மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன் கூறினார்.
லோக்சபாவில் அவர் கூறியதாவது: மொத்தத் தொகையான, 212 கோடி ரூபாயில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 142 கோடி ரூபாயும், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு, 70 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
உதவித் தொகைக்கான மாணவர்களை தேர்வு செய்வது, பல்கலை மானியக்குழுவால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு நெப்போலியன் கூறினார்.