Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சப்-கலெக்டர் ஆண்டு ஆய்வில் நலத்திட்ட உதவி வழங்கல் : கலெக்டர் மரக்கன்று நட்டார்

சப்-கலெக்டர் ஆண்டு ஆய்வில் நலத்திட்ட உதவி வழங்கல் : கலெக்டர் மரக்கன்று நட்டார்

சப்-கலெக்டர் ஆண்டு ஆய்வில் நலத்திட்ட உதவி வழங்கல் : கலெக்டர் மரக்கன்று நட்டார்

சப்-கலெக்டர் ஆண்டு ஆய்வில் நலத்திட்ட உதவி வழங்கல் : கலெக்டர் மரக்கன்று நட்டார்

ADDED : ஜூலை 28, 2011 01:25 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி சப்கலெக்டர் அலுவலகத்தில் ஆண்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு மரங்கன்றுகளை நட்டும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ஆண்டுக்கு ஒரு முறை சப்கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை சரிபார்ப்பார். நீண்ட காலமாக நிலுவையில் ஏதாவது மனுக்கள் தீர்வு காணாமல் இருந்தால் அதற்கான காரணங்களை கேட்பார். அந்த மனுவிற்கு ஏதாவது தீர்வு காண்பதற்கு வேண்டிய வழிமுறைகளை ஆண்டு ஆய்வின் போது வழங்குவது வழக்கமான நடைமுறையாகும். நேற்று முன்தினம் தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆண்டு ஆய்வு கலெக்டர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கலெக்டர் செல்வராஜ் சப்கலெக்டர் அலுவலகத்தில் முன் பகுதியில் இரண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார். சப்-கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், நேர்முக உதவியாளர் நாகராஜன், தூத்துக்குடி சிவில் சப்ளை தாசில்தார் மெகாவேல் ஞானதீபம், சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கரநாராயணன், தூத்துக்குடி தாலுகா மண்டல துணைத் தாசில்தார் காளியப்பன், ஆர்.ஐ., சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செல்வராஜ் வழங்கினார். பின்னர் ஆண்டு தணிக்கையினை அவர் மேற்கொண்டார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us