பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி
பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி
பன்ருட்டி அருகே சாலை விபத்து: இருவர் பலி
ADDED : ஆக 18, 2011 01:37 PM
பன்ருட்டி: கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியாயினர்.
இடுப்புக்குறிச்சியை சேர்ந்த பட்டுச்சாமி ( 50), வீரமணி (27 ). இருவரும் பைக்கில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கடலூர் - விருத்தாச்சலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வீரசிங்கன்குப்பம் அருகே இந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.