/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆர்.ஐ.,யை தாக்கிய டிரைவரை கைது செய்யக் கோரி போராட்டம்ஆர்.ஐ.,யை தாக்கிய டிரைவரை கைது செய்யக் கோரி போராட்டம்
ஆர்.ஐ.,யை தாக்கிய டிரைவரை கைது செய்யக் கோரி போராட்டம்
ஆர்.ஐ.,யை தாக்கிய டிரைவரை கைது செய்யக் கோரி போராட்டம்
ஆர்.ஐ.,யை தாக்கிய டிரைவரை கைது செய்யக் கோரி போராட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வருவாய் ஆய்வாளரை லாரி டிரைவர் சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி அடுத்த கங்குலேரியில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மற்றும் ஆடு, மாடுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இதற்காக கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி சமுதாய கூடத்தில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஃபேன் ஆகிவற்றை குருபரபள்ளி ஆர்.ஐ., பூவதன் லாரியில் எடுத்து கொண்டு விழா நடக்கும் இடத்துக்கு சென்றார்.
ராயக்கோட்டை சாலையில் பெத்ததாளபள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த கல் ஏற்றி வந்த லாரி, இலவச பொருட்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதனால், ஆர்.ஐ.,பூவதன், கல் ஏற்றி வந்த லாரி டிரைவரை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தராஜ் (30) பூவிதனை சரமாரியாக தாக்கினார். பூவிதன் தாலுகா போலீஸில் புகார் செய்தார். டிரைவர் தலைமறைவானதால் இன்ஸ்பெக்டர் எல்லப்பன் லாரி உரிமையாளர் கோõவிந்தனை பிடித்து விசாரித்து வருகிறார். தகவல் அறிந்த வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டேஷன் முன் குவிந்தனர்.அப்போது டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் ஸ்டேஷன் முன் போராட்டம் நடத்தினர். அதன் பின் தாசில்தார் அலுவலகம் முன் போலீஸாரை கண்டித்தும், ஆர்.ஐ.,யை தாக்கிய டிரைவரை கைது செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். செலயாளர் முருகன் முன்னிலை வகித்தார்.


