இலவச வேட்டி, சேலை கொள்முதல் : அரசு அதிரடி உத்தரவு
இலவச வேட்டி, சேலை கொள்முதல் : அரசு அதிரடி உத்தரவு
இலவச வேட்டி, சேலை கொள்முதல் : அரசு அதிரடி உத்தரவு
ADDED : ஜூலை 12, 2011 07:05 PM
சென்னை: இலவச வேட்டி, சேலை ரகங்களை, ஆண்டு முழுவதும் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆறு மாதங்களுக்கு மட்டுமே இலவச வேட்டி, சேலை ரகங்கள் கொள்முதல் செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. எனவே, இன்றைய தேதியிலிருந்து, கைத்தறி மற்றும் பெடல் தறியில் உற்பத்தியாகும், இலவச வேட்டி, சேலை ரகங்கள், ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


