ADDED : ஜூலை 13, 2011 11:45 PM
கடலூர்: சைக்கிளில் சென்ற முதியவர் மோட்டார் பைக் மோதி இறந்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூமாலை, 70.
விவசாயியான இவர் நேற்று காலை சென்னை - கும்பகோணம் சாலையில் வானமாதேவி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் பைக் மோதியது. படுகாயமடைந்த முதியவர் பூமாலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


