/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சென்டாக் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே செலுத்த பொறுப்பு ஏற்க வேண்டும் : எஸ்.பி.சிவக்குமார்சென்டாக் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே செலுத்த பொறுப்பு ஏற்க வேண்டும் : எஸ்.பி.சிவக்குமார்
சென்டாக் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே செலுத்த பொறுப்பு ஏற்க வேண்டும் : எஸ்.பி.சிவக்குமார்
சென்டாக் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே செலுத்த பொறுப்பு ஏற்க வேண்டும் : எஸ்.பி.சிவக்குமார்
சென்டாக் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே செலுத்த பொறுப்பு ஏற்க வேண்டும் : எஸ்.பி.சிவக்குமார்
ADDED : ஜூலை 27, 2011 11:47 PM
புதுச்சேரி : சென்டாக் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் மாணவ மாணவிகளுக்கு, எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் தாங்கள் எந்தக் கல்லூரியில் சேரலாம் என்பதை, தங்களது குடும்ப சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் முடிவு செய்து கொள்ள இயலும்.
கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே மாணவர்களுக்கு அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பெற்றோர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் அதிர்ச்சி தரும் அளவில் தனியார் கல்லூரிகள், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்களை விட அதிக கட்டணம் கேட்பதாக தெரிகிறது.அப்படி செலுத்த முடியாவிட்டால், கல்லூரிகளில் சேர்க்க முடியாது என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கிடையில் மாணவ மாணவிகள் கல்லூரியில் சேர்ப்பதற்குரிய காலமும் முடிந்து விடுகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது. இதைப் போக்கும் வகையில், சென்டாக் கலந்தாய்வு நடக்கும் இடத்திலேயே, சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்பட வேண்டுமென்று நாங்கள் முன்னரே கேட்டுக் கொண்டோம். சேர்க்கை கடிதம் வழங்கப்படுவதற்கு முன், அரசே பெற்றோரிடமிருந்து சரியான கட்டணத்தை வசூலித்துக் கொண்டு உத்தரவை கொடுக்கலாம் அல்லது அரசே கல்விக் கட்டணத்தைச் செலுத்தும் சூழல் இருப்பதால், அரசே பொறுப்பேற்றுக் கொண்டு பெற்றோரிடம் பணம் பெறமால் சேர்க்கை கடிதத்தைக் கொடுக்கலாம்.ஒட்டுமொத்தமாக சேர்க்கை கடிதம் சென்டாக் கலந்தாய்வு நடக்கும் இடத்திலேயே கொடுக்கப்படவில்லை என்றால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. எனவே, முதல்வர் உடனே இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.