Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முறையான பதிவு எண் எழுதாத வாகனங்களுக்கு இலவசமாக மாற்றிய போக்குவரத்து துறையினர்

முறையான பதிவு எண் எழுதாத வாகனங்களுக்கு இலவசமாக மாற்றிய போக்குவரத்து துறையினர்

முறையான பதிவு எண் எழுதாத வாகனங்களுக்கு இலவசமாக மாற்றிய போக்குவரத்து துறையினர்

முறையான பதிவு எண் எழுதாத வாகனங்களுக்கு இலவசமாக மாற்றிய போக்குவரத்து துறையினர்

ADDED : செப் 17, 2011 11:07 PM


Google News
Latest Tamil News

சென்னை: போக்குவரத்து விதிமுறை மீறி வாகனப் பதிவு எண்கள் எழுதப்பட்ட வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மடக்கிப் பிடித்து, இலவசமாக மாற்றி எழுதி அனுப்பினர்.



மோட்டார் வாகன விதி, 50 மற்றும் 51ன்படி, அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும்.

இந்த விதிப்படி கூறப்பட்டுள்ள அளவில், பதிவு எண் எழுதாமல், பலர் தங்களது விருப்பப்படி எழுதிக் கொள்கின்றனர். தங்களது விருப்ப அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகளை பதிவு எண் பலகையில் ஒட்டி வைத்தும், நியூமராலஜிபடி எண்களைப் பெரிதாக எழுதி வைத்துக் கொள்கின்றனர். வாகனப் பதிவு எண்கள் தெளிவாக இல்லாததால், போக்குவரத்து விதி மீறல், விபத்து சமயங்களில் அடையாளம் தெரியாமல் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவில் எண்களை எழுதுவதற்கு, கடந்த ஆக.31ம் தேதி வரை போக்குவரத்துத் துறை கெடு விதித்தது. கெடு முடிந்தும், பெரும்பாலானோர் நம்பர் பலகையை மாற்றவில்லை. இதையடுத்து, போக்குவரத்துத் துறை கமிஷனர் முருகையா உத்தரவின்படி, சென்னை வடக்கு மண்டலம் இணை போக்குவரத்து ஆணையர் பன்னீர்செல்வம் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சென்னை நகரின் பல்வேறு இடங்களில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை சோதனை செய்தனர். டிராபிக் போலீஸ் உதவியுடன் நடந்த இந்த சோதனையில், டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு, விதிமுறை மீறப்பட்ட பதிவு எண் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. உடனடியாக, மோட்டார் வாகன விதிமுறைப்படி, பெயின்டர் உதவியுடன் பதிவு எண்கள், இலவசமாக எழுதப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us