/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கேட்பாரற்று கிடந்த மர்ம கார் தியாகதுருகத்தில் பரபரப்புகேட்பாரற்று கிடந்த மர்ம கார் தியாகதுருகத்தில் பரபரப்பு
கேட்பாரற்று கிடந்த மர்ம கார் தியாகதுருகத்தில் பரபரப்பு
கேட்பாரற்று கிடந்த மர்ம கார் தியாகதுருகத்தில் பரபரப்பு
கேட்பாரற்று கிடந்த மர்ம கார் தியாகதுருகத்தில் பரபரப்பு
ADDED : செப் 18, 2011 10:21 PM
தியாகதுருகம்:தியாகதுருகம் மலை அருகே மர்மமான முறையில் நின்றிருந்த ஆம்னி
கார் பரபரப்பை ஏற்படுத்தியது.தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் நேற்று
காலை கேட்பாராற்று ஆம்னி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. தகவலறிந்த
இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு விரைந்து சென்று அந்த காரை சோதனை செய்து, போலீஸ்
ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார்.புதிதாக உள்ள கார் இப்பகுதியில் கொண்டு வந்து
நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. திருடப்பட்ட காரை இங்கு கொண்டு
நிறுத்திவிட்டு சென்றார்களா அல்லது தவறான காரியங்களுக்கு
பயன்படுத்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரின்
பின்புறம் 'காந்தி நம் நாட்டுக்காக உழைத்தார், நாம் காந்தி நாட்டுக்காக
உழைக்கிறோம்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.சென்னையில் பதிவு செய்யப்பட்ட
அதன் பதிவு எண்ணை பயன்படுத்தி கார் உரிமையாளர் யார் என்பதை
கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5
மாதங்களுக்கு முன் தியாகதுருகம் மலையில் 25 வயது மதிக்க தக்க பெண்
கற்பழிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். அவர் யாõர் என்பது இதுவரை
மர்மமாகவே உள் ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் தியாகதுருகம் அருகே
கள்ளசாராயம் ஏற்றி சென்ற மாருதி கார் விபத்தில் சிக்கி
பிடிபட்டது.இந்நிலையில் நேற்று மர்மமாக நிறுத்தப்பட்டு சென்ற ஆம்னி கார்
இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.