இருதய ஆப்பரேஷனுக்கு பணம்இல்லாமல் அவதிப்படும் சிறுமி
இருதய ஆப்பரேஷனுக்கு பணம்இல்லாமல் அவதிப்படும் சிறுமி
இருதய ஆப்பரேஷனுக்கு பணம்இல்லாமல் அவதிப்படும் சிறுமி
ADDED : ஜூலை 20, 2011 05:38 AM
ராமநாதபுரம்:இருதய ஆப்பரேஷனுக்கு, பணம் இல்லாததால், சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.ராமநாதபுரம் அருகே, தங்கப்பா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி.
மகள் பவித்ரா, 14, இருதய நோயால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டார். முடியாத நிலையில், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். தற்போது மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இருதயத்தில் வால்வு ஆப்பரேஷன் செய்ய 1 லட்சத்து 85 ஆயிரம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பவித்ராவின் தாயார் ராதிகா கூறுகையில்,''பணமில்லாததால் ஆப்பரேஷன் தேதி தள்ளி போய்விட்டது. கூலி வேலை செய்யும் எங்களால், பெரிய தொகை செலவிட முடியாது. எனவே, நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன் வரவேண்டும்,'' என்றார். உதவ விரும்புவோர் 90477 06123ல் தொடர்பு கொள்ளலாம்.