Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இரு வேறு சாலை விபத்து இருவர் பரிதாப பலி

இரு வேறு சாலை விபத்து இருவர் பரிதாப பலி

இரு வேறு சாலை விபத்து இருவர் பரிதாப பலி

இரு வேறு சாலை விபத்து இருவர் பரிதாப பலி

ADDED : செப் 16, 2011 01:38 AM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் அருகே நடந்த இரு வேறு சாலை விபத்துக்களில், பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் அரசு பஸ் டிரைவர் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). அவர், பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளராகவும், யூனியன் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார். நேற்று காலை 5.30 மணியளவில், தலைவாசலில் இருந்து வி.கூட்ரோடுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, நத்தக்கரை நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகில், எதிரே வந்த 'மகேந்திரா மேக்ஸி கஃப்' என்ற மினி சரக்கு வேன், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், ராஜேந்திரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மினி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததால், டிரைவர் உள்ளிட்ட இருவர் தப்பியோடிவிட்டனர்.



அதேபோல், பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பெரியண்ணன் (37). அவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், பைக்கில் சென்றபோது சாலையோர மின்கம்பத்தில் மோதியது. அதில் படுகாயமடைந்த பெரியண்ணன், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெரியண்ணன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தலைவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us