/உள்ளூர் செய்திகள்/தேனி/குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்
குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்
குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்
குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2011 11:16 PM
தேனி : ஐகோர்ட் தீர்ப்பை ஏற்று குரூப் 2 நேர்முகதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த 2010 ஏப்., 11 ல் குரூப் 2 தேர்வுகள் நடந்தன. கடந்த ஜன. 2011ல் முடிவுகள் வெளியானது. தொடர்ந்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் அடிப்படையில் முன்பு அறிவிக்கப்பட்டதை விட, கூடுதல் பணியிடங்களை நிரப்ப, கடந்த தி.மு.க., அரசு முடிவு செய்தது. இதற்கு தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் முறையிட்டனர். தேனியை சேர்ந்த சி.சிவமுருகன் (தேர்வில் வெற்றி பெற்றவர்) கூறியதாவது: குரூப் 2 தேர்வின்போது நிர்ணயித்த பணியிடங்களை மட்டும் நிரப்ப வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். கோர்ட்டும், தேர்வு அறிவிப்பின் போது, நிர்ணயித்த பணியிடங்களை மட்டும் நிரப்ப வேண்டும், என தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே நேர்முக தேர்வு முடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கோர்ட் தீர்ப்பை ஏற்று நேர்முகதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். பணியிடங்களை நிரப்ப வேண்டும்,என்றார்.