Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கலவர பகுதிக்கு ராகுல் திடீர் வருகை

கலவர பகுதிக்கு ராகுல் திடீர் வருகை

கலவர பகுதிக்கு ராகுல் திடீர் வருகை

கலவர பகுதிக்கு ராகுல் திடீர் வருகை

ADDED : அக் 09, 2011 11:32 PM


Google News
Latest Tamil News

பரத்பூர்(ராஜஸ்தான்) : ராஜஸ்தான் மாநிலத்தில், கலவரம் பாதித்த பகுதிகளுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் திடீரென்று வருகை தந்தார்.



ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்கார்க் கிராமத்தில், கடந்த மாதம் 15ம் தேதி, நிலம் ஒதுக்குவது தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 10 பேர் பலியாகினர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், கலவரம் நடந்த கோபால்கார்க் கிராமத்திற்கு நேற்று திடீரென வந்தார். கலவரம் நடந்த பகுதிகளைச் சுற்றிப்பார்த்த ராகுல், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us