ADDED : ஆக 05, 2011 03:13 AM
கடலூர் : கடலூரில் பி.எஸ்.என்.எல்., சார்பில் ரீ கனெக்ஷன் மேளா
நடந்தது.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் தொலைபேசி இணைப்பு பெற்று நீண்ட
நாட்களாக பணம் கட்ட தவறி இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களை, லேன்ட்
லைன், வில், மொபைல் ஆகியவை திரும்ப ரீ கனெக்ஷன் வழங்கும் திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது.அதனையொட்டி ரீ கனெக்ஷன் மேளா கடலூர் டவுன் ஹால்
அருகே நடந்தது.கடலூர் பகுதி கோட்டப் பொறியலாளர் பாலகிருஷ்ணன், துணை கோட்ட
பொறியாளர் ராமலிங்கம், பாண்டுரங்கன், இளநிலைப் பொறியாளர்கள் சாவித்திரி,
நாகராஜன், சித்ரா, சிவக்குமார், ஜெயராஜ், ராகவன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.அப்போது சிம் கார்டு விற்பனை மற்றும் லேன்ட் லைன் பதிவு
செய்யப்பட்டது.
மேலும் தரைவழி தொலைபேசி போன்று அமைப்புள்ள
ஜி.எஸ்.எம்.,-எப்.டபுள்யூ. பி., சிம் கார்டை பயன்படுத்தும் புதிய தொலைபேசி
கருவிகள் விற்பனை செய்யப்பட்டது.