/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த வேட்பாளர்கள் : கி.கிரியில் பெரும் பரபரப்புகலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த வேட்பாளர்கள் : கி.கிரியில் பெரும் பரபரப்பு
கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த வேட்பாளர்கள் : கி.கிரியில் பெரும் பரபரப்பு
கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த வேட்பாளர்கள் : கி.கிரியில் பெரும் பரபரப்பு
கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்த வேட்பாளர்கள் : கி.கிரியில் பெரும் பரபரப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது பல்வேறு காரணங்களால் மனுக்கள் தள்ளுபடி ஆன வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
ஆனால், பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனு பரிசீலனையில் மாவட்டம் முழுவதும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகளின்படி அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து மனுக்களில் உரிய ஆவணனங்கள் இணைக்காமல் உள்ளது. கையெழுத்து போடாமல் உள்ளது உள்ளிட்ட பல தவறுகளை சுட்டிகாட்டி பலரது மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். இதனால், பஞ்சாயத்து தலைவர் பதவி கனவில் இருந்த பல வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்து மனுவை ஏற்று கொள்ளும்படி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்களும் பல இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இதனால் செய்வதறியாத தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் உயர் அதிகாரிக்கு தகவல் அளித்துவிட்டு பிரச்னை வேட்பு மனுக்ளை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை நாளை மாலை அறிவிப்பதாக கூறியுள்ளனர். இதனையும் ஏற்றுக்கொள்ளாத வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்ககளை வாகனங்களில் அழைத்து கொண்டு கலெக்டரிடம் புகார் மனு அளிக்க கூட்டம் கூட்டமாக நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். நேற்று காலை ஊத்தங்கரை ஒன்றியம் திருவணபபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படும் வெங்கடேசன் என்பவர் தங்களது ஆதரவாளர்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
இவரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து பல வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் மகேஸ்வரன் கூறியது: உள்ளாட்சி தேர்தலைபொறுத்தவரை கலெக்டர் தேர்தலை ஒருங்கிணைத்து தேர்தல் நடத்துவதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பணியை மட்டுமே செய்ய முடியும். வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கையில் உள்ளது. மனுக்கள் மீது அவர்கள் தான் முடிவு எடுக்கப்பார்கள். அவர்களை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இதற்காகவே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டு தேர்தல் கமிஷன் விதிமுறைகள் அடங்கிய கையேடு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் செயல்படுவார்கள். என்னிடம் புகார் அளித்தாலும் அதன் மீது என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, வேட்பாளர்கள் எந்த கருத்தை தெரிவிப்பதாக இருந்தாலும் தேர்தல் நடத்தும் அலுவலரை அணுகவேண்டும். இதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்களை அழைத்து வருவதை வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


