Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது

ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது

ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது

ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது

ADDED : ஜூலை 31, 2011 01:05 AM


Google News

ஓசூர்: கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரியில் ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுப்பட்ட தி.மு.க.,வினரை போலீஸார் கைது செய்தனர்.தி.மு.க., பொருளாளரும், முன்னாள் துணை முதல்வரான ஸ்டாலினை போலீஸார் நேற்று கைது செயதனர்.

ஆவேசமடைந்த தி.மு.க., வினர் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.ஓசூர் நகராட்சி அலுவலகம் முன் தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், நகராட்சி தலைவர் (பொ) மாதேஸ்வரன், கவுன்சிலர் எல்லோராமணி, மாவட்ட பிரதிநிதிகள் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மணி, ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க., வினர் திரண்டனர். இதனால், அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணப்பன், தனிக்காசலம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.தி.மு.க., வினர் திடீரென்று கைகளில் கட்சி கொடியை ஏந்தியபடி அ.தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டபடி பாகலூர் சர்க்கிள் சாலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் மறியலில் ஈடுப்பட்ட நான்கு பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்தனர்.* சூளகிரி பி.டி.ஓ., அலுவலகம் முன் ஒன்றிய செயலாளர் வீராரெட்டி தலைமையில் தி.மு.க., வினர் கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுப்பட்ட 24 பேரை கைது செய்தனர். தளி பஸ்ஸ்டாண்ட் தளி பிரகாஷ், கவுன்சிலர் திவாகர், நாகராஜ் ஆகியோர் தலைமையில் தி.மு.க., வினர் கோஷமிட்டு மறியலில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுப்பட்ட 35 பேரை போலீஸார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டையில் 11வது வார்டு கவுன்சிலர் எல்லப்பன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தி.மு.க., வினர் மறியலில் ஈடுப்பட்டனர். போலீஸார் எச்சரித்ததால் கலைந்து சென்றனர். அஞ்செட்டியில் காதர்பாட்ஷா தலைமையில் மறியலில் செய்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி ரவுண்டனாவில் தி.மு.க., மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் காஞ்சனா கமலநாதன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஒன்றிய செயலாளர் வெங்கடப்பன், நகராட்சி துணை தலைவர் பழனி, முன்னாள் எம்.பி., வெற்றி செல்வன், கவுன்சிலர்கள் திருமலைநாதன், கனல் சுப்பிரமணி ஆகியோர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ., நரசிம்மன் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் செந்தில் மற்றும் ராமமூர்த்தி, சரவணன், சிவலிங்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட 10 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் பெருகோப்பனப்பள்ளி அருகே பஞ்சாயத்து தலைவர் முனுசாமி, கிளை செயலாளர் முரளிதரன் மற்றும் மோகன் ஆகியோர் உள்ளிட்ட 10 பேர் சாலையில் கற்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீஸார் கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.மஹாராஜகடையில் கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பர்கூரில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் பர்கூர் பஸ் ஸ்டாண்டு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us