/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சட்டசபை காங்., தலைவராக வைத்திலிங்கம் நியமனம்சட்டசபை காங்., தலைவராக வைத்திலிங்கம் நியமனம்
சட்டசபை காங்., தலைவராக வைத்திலிங்கம் நியமனம்
சட்டசபை காங்., தலைவராக வைத்திலிங்கம் நியமனம்
சட்டசபை காங்., தலைவராக வைத்திலிங்கம் நியமனம்
ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : சட்டசபை காங்., கட்சியின் தலைவராக வைத்திலிங்கம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில், 7 எம்.எல்.ஏ.,க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக காங்., அமர்ந்துள்ளது. சட்டசபை கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை காங்., தலைவி சோனியாவிற்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்பி வைத்தனர். பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ள நிலையில், சட்டசபை காங்., தலைவராக வைத்திலிங்கம் நேற்று தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறும்போது, 'சட்டசபை காங்., கட்சியின் தலைவராக வைத்திலிங்கம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக, அகில இந்திய காங்., பொதுச் செயலாளரும், புதுச்சேரி பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் தகவல் அனுப்பி உள்ளார்' என்றார். காங்., தலைவி சோனியா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், தற்காலிகமாக வைத்திலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார், சோனியா டில்லி திரும்பியதும் இறுதி முடிவு எடுக்கப்படும் என காங்., வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை காங்., கட்சியின் தலைவரே, சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக முடியும். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது அமைச்சருக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.