தெலுங்கானா போராட்டம்: 147 ரயில்கள் ரத்து
தெலுங்கானா போராட்டம்: 147 ரயில்கள் ரத்து
தெலுங்கானா போராட்டம்: 147 ரயில்கள் ரத்து
ADDED : ஜூலை 14, 2011 07:27 AM
ஐதராபாத்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி இன்று ரயில் மறியல் போராட்டம் நடப்பதால், எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தனித்தெலுங்கானவை வலியுறுத்தி தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழுவினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் ஐதராபாத், செகந்திராபாத் வழியாக செல்லும் 20 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 14 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 23 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே மண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர தெலுங்கானா பகுதிக்கு செல்லும் 31 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தெலுங்கானா கூட்டுநடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் கொண்டராம் கூறுகையில், ரயில் மறியல் போராட்டம் இன்று அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு தெலுங்கான பகுதி வாழ் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார்.