/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சியில் 10.42 லட்சம் வாக்காளர்கள்மாநகராட்சியில் 10.42 லட்சம் வாக்காளர்கள்
மாநகராட்சியில் 10.42 லட்சம் வாக்காளர்கள்
மாநகராட்சியில் 10.42 லட்சம் வாக்காளர்கள்
மாநகராட்சியில் 10.42 லட்சம் வாக்காளர்கள்
ADDED : செப் 15, 2011 11:17 PM
கோவை:உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய மாநகராட்சி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகள், துடியலூர், வெள்ளக்கிணர், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, வீரகேரளம், வடவள்ளி ஆகிய ஏழு பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டதால், முன்பு 72 வார்டுகளுடன் இருந்த கோவை மாநகராட்சி, இப்போது 100 வார்டுகளை கொண்டதாக உருமாறியுள்ளது. இந்த 100 வார்டுகள் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகளுக்குள் வருகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கவுண்டம்பாளையத்தில் 86 ஆயிரத்து 635 ஆண்கள், 83 ஆயிரத்து 036 பெண்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 671 பேர் உள்ளனர். கோவை வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 861 ஆண்கள், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 983 பெண்கள் என மொத்தம் இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 844 வாக்காளர்கள் உள்ளனர்.தொண்டாமுத்தூர் தொகுதியில் 72 ஆயிரத்து 528 ஆண்கள், 70 ஆயிரத்து 20 பெண்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 548 பேர் உள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் ஒரு லட்சத்து 805 ஆண்கள், 99 ஆயிரத்து 577 பெண்கள் என மொத்தம் இரண்டு லட்சத்து 382 பேர் உள்ளனர்.சிங்காநல்லூர் தொகுதியில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 553 ஆண்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து ஆறு பெண்கள் என மொத்தம் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேர் உள்ளனர். கிணத்துக்கடவு தொகுதியில் 39 ஆயிரத்து 344 ஆண்கள், 38 ஆயிரத்து 899 பெண்கள் என மொத்தம் 78 ஆயிரத்து 243 பேர் உள்ளனர்.புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியிலில் ஆறு தொகுதிகளுக்கான பத்து லட்சத்து 43 ஆயிரத்து 247 வாக்காளர்களில் இருந்து 789 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி, மாநகராட்சி பகுதியில் பத்து லட்சத்து 42 ஆயிரத்து 458 வாக்காளர்கள் உள்ளனர்.வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. திருத்தம் செய்ய விரும்புவோர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.