/உள்ளூர் செய்திகள்/தேனி/வராக நதி குறுக்கே பாலம் நெடுஞ்சாலைதுறை மெத்தனம்வராக நதி குறுக்கே பாலம் நெடுஞ்சாலைதுறை மெத்தனம்
வராக நதி குறுக்கே பாலம் நெடுஞ்சாலைதுறை மெத்தனம்
வராக நதி குறுக்கே பாலம் நெடுஞ்சாலைதுறை மெத்தனம்
வராக நதி குறுக்கே பாலம் நெடுஞ்சாலைதுறை மெத்தனம்
ADDED : ஜூலை 11, 2011 11:51 PM
தேவதானப்பட்டி : மழைக்காலம் துவங்குவதற்குள் ஜெயமங்கலம் வராகநதியின் குறுக்கே புதிய பாலம் கட்டி முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயமங்கலம் வராகநதியின் குறுக்கே, கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டுவற்கு அனுமதிக்கப்பட்டு பழைய பாலம் உடைக்கப்பட்டது. பாலம் உடைக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வரும் போது சேதம் அடையும். சில்வார்பட்டி, நாகம்பட்டி, கதிரப்பபன்பட்டி, டி.வாடிப்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆண்டிபட்டி, வைகை அணை செல்ல முடியாது. ஆண்டிபட்டி, ஜெயமங்கலம் கிராமங்களை சேர்ந்த மக்கள் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு செல்வதில் தடை ஏற்படும். மழைக்காலம் துவங்குவதற்கு முன் வராகநதியின் குறுக்கே பாலம்கட்டும் பணியை துவங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்