/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கவர்னர் உரையில் நல்ல திட்டங்கள் : அரசு கொறடா நேரு பெருமிதம்கவர்னர் உரையில் நல்ல திட்டங்கள் : அரசு கொறடா நேரு பெருமிதம்
கவர்னர் உரையில் நல்ல திட்டங்கள் : அரசு கொறடா நேரு பெருமிதம்
கவர்னர் உரையில் நல்ல திட்டங்கள் : அரசு கொறடா நேரு பெருமிதம்
கவர்னர் உரையில் நல்ல திட்டங்கள் : அரசு கொறடா நேரு பெருமிதம்
ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : 'கவர்னர் உரை பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது' என அரசு கொறடா நேரு கூறினார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அவர் பேசியதாவது: கல்கத்தாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய புகழ் பெற்ற மியூசியம் போல, முதல்வரால் கட்டப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனை இன்று, அவரால்தான் முழுமையாகச் செயல்படுகிறது. பேறுகால இறப்பு தேசியக் குறியீடு ஒரு லட்சத்திற்கு 1000 ஆக இருக்கும்போது, புதுச்சேரியில் 36 ஆக உள்ளது. இதை மேலும் குறைக்க, பேறு காலத்திற்கு முன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் 4 முறை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கர்ப்பிணிகளுக்கு எடுத்துக்கூற, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சென்டாக் மூலமாக மருத்துவம், பொறியியல் பயிலும் 1662 மாணவர்களுக்கு7.49 கோடி ரூபாய் உதவித் தொகை அளிக்கப்பட்டது பாராட்டத்தக்கது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் இளம் குற்றவாளிகள் நீதி வாரியம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் அமைய உள்ளதும் வரவேற்கத் தக்கது. அட்டவணை இன மக்களுக்காக 9 இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டு வசதி அளிப்பதும், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக ஒரு துறை அமைக்கப்பட உள்ளதும், பெரும்பான்மை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்படுத்தும் அம்சமாகும். மொத்தத்தில் கவர்னர் உரை பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு நேரு பேசினார்.