ADDED : செப் 28, 2011 12:54 AM
மதுரை : மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில் மரக்கன்று நடுவிழா நடந்தது.அம்மா பகவான் சேவா சமிதியின் ஒன்னெஸ் பசுமை திட்டம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
விழாவில் இயக்க ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். பள்ளி முதல்வர் சாந்தி துவக்கி வகித்தார். ரிலையன்ஸ் வட்டாரத் தலைவர் சுப்பாராவ், மனிதவளத் துறை அலுவலர் ராஜா பங்கேற்றனர்.