Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/குறுவை நெல்லை தாக்கும் இலைகருகல் நோய் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி "அட்வைஸ்'

குறுவை நெல்லை தாக்கும் இலைகருகல் நோய் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி "அட்வைஸ்'

குறுவை நெல்லை தாக்கும் இலைகருகல் நோய் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி "அட்வைஸ்'

குறுவை நெல்லை தாக்கும் இலைகருகல் நோய் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி "அட்வைஸ்'

ADDED : செப் 01, 2011 11:46 PM


Google News

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாரத்தில் உள்ள வடமலை மனக்காடு, கரியாப்பட்டினம், பிராந்தியன்கரை, மூலக்கரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் குறுவை நெல் சாகுபடியில் இலையுறை கருகல், அழுகல் மற்றும் சிலந்தி தாக்குதல்கள் அதிகமாக உள்ளன.

இந்த நோய்களை கட்டுப்படுத்துவதுக்கான ஆலோசனையை வட்டார விவசாய உதவி இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இறையுறை கருகல் நோய் கதிர்களை மூடியுள்ள இலையுறைகளை செம்பழுப்பு, சாம்பல் நிறபுள்ளிகள் மற்றும் திட்டுகள் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த சூடோமோனாஸ், பாக்டீரியா மருந்தினை ஹெக்டேருக்கு இரண்டரை கிலோ வீதம் ஐம்பது கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவு செய்த 30 நாட்களில் இட வேண்டும்ச.



சகார்பண்டைசிம் அல்லது குறத்தி கோனா ஜோல் என்ற மருந்தினை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி அளவில் கலந்து இலை வழியாக தெளிக்க வேண்டும். இலையுறை அழுகல் நோய் கதிர்களை மூடியுள்ள இலையுறைகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றுதல், கதிர் வெளிவராமலும், வெளிவரும் கதிர்களில் வெள்ளை நிற பூசானம் பவுடர் படிந்தும், காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த நெய்வேலி காட்டாமணக்கு அல்லது வேலி கருவை இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐந்து சதவீத கரைசல் அல்லது வேப்பங்கொட்டை சாறு ஐந்து சதவீத கரைசல் இலை வழியாக தெளிக்க வேண்டும். கார்பண்டைசிம் அல்லது மோன்கோ செப் ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டரை கிராம் வீதம் கலந்து ஒரு ஏக்கருக்கு லிட்டர் கரைசலை பயன்படுத்தலாம்.



சிலந்தி தாக்குதல் நோய் வெள்ளை அல்லது சிவப்பு நிற சிலந்தி பூச்சிகளால் தாக்கப்பட்ட பயிர்கள் வெளிறிய நிலையில் வளர்ச்சி குன்றி காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் டைகோபால் இரண்டரை மில்லி அல்லது இப்நாசகுயின் 10 ஈஸி ஒன்னரை மில்லி அல்லது காப்பர் ஜிட் 570 ஈஸி ஒன்னறை மில்லி அல்லது பயிரோ மெசிபன் 240 எஸ்.சி., ஒரு கிராம் வீதம் கலந்து ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தெளிக்கலாம். இவ்வாறு வட்டார விவசாய அலுவலர் மணிகண்டன் தெரிவித்தார். மேலும் விபரங்கள் அறிய 7373088012 என்ற மொபைல் எண் அல்லது உதவி விவசாய அலுவலர் வேதரெத்தினம் 9976480462 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம் என தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us