/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சுங்கான்கேட்டில் நிரந்தர போலீஸ் "பீட்' பொதுநலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்சுங்கான்கேட்டில் நிரந்தர போலீஸ் "பீட்' பொதுநலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்
சுங்கான்கேட்டில் நிரந்தர போலீஸ் "பீட்' பொதுநலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்
சுங்கான்கேட்டில் நிரந்தர போலீஸ் "பீட்' பொதுநலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்
சுங்கான்கேட்டில் நிரந்தர போலீஸ் "பீட்' பொதுநலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஆக 09, 2011 01:38 AM
கும்பகோணம்: 'காரைக்கால் ரோடு சுங்கான்கேட்டில் நிரந்தர போலீஸ் 'பீட்'
போடவேண்டும்' என்று கும்பகோணம் பாரதிநகர் தெற்கு பொதுநலச்சங்க கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கும்பகோணம் பாரதிநகர் தெற்கு
பொதுநலச்சங்கத்தின் கூட்டம் இஷ்டசித்தி விநாயகர் கோவில் தியானமண்டபத்தில்
நடந்தது. சங்கத்தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.
செயலாளர் ஆர்.
குமரவேல் வரவேற்றார்.கூட்டத்தில், வருகிற 15ம் தேதி சுதந்திரதினத்தன்று
சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா குழு அமைத்து கொண்டாடுவது, விழாவில் கடந்த
அரசு பொதுத்தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் அதிக
மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பது, பழவாத்தான் கட்டளை
வடிகால் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பாக மீண்டும் மாவட்ட கலெக்டர் மற்றும்
பொதுப்பணித்துறை வடிகால் சீரமைப்பு பிரிவு அலுவலர்களுக்கு கோரிக்கை மனு
அளிப்பது, காரைக்கால் ரோடு சுங்கான்கேட்டில் நிரந்தரமாக போலீஸ் 'பீட்'
போடவேண்டும் என கேட்டு சம்பந்தபட்ட அலுவலருக்கு கோரிக்கை அனுப்புவது,
தஞ்சையிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் நால்ரோடு வழியாக செல்ல
வலியுறுத்துவது, எம்.பி., மணிசங்கர் ஒதுக்கிய 3.5 லட்ச ரூபாய் நிதியில்,
காந்திஜி தெருவில் மழைநீர் வடிய தெற்கிலிருந்து வடக்காக வடிகால் அமைக்க
உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.


