/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாதசாரிகளை பதம் பார்க்கும் மங்கம்மா சாலை சர்வீஸ் ரோடுபாதசாரிகளை பதம் பார்க்கும் மங்கம்மா சாலை சர்வீஸ் ரோடு
பாதசாரிகளை பதம் பார்க்கும் மங்கம்மா சாலை சர்வீஸ் ரோடு
பாதசாரிகளை பதம் பார்க்கும் மங்கம்மா சாலை சர்வீஸ் ரோடு
பாதசாரிகளை பதம் பார்க்கும் மங்கம்மா சாலை சர்வீஸ் ரோடு
தென்காசி : தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடு பாதசாரிகள் மற்றும் வாகனங்களை பதம் பார்க்கும் ரோடாக மாறி விட்டது.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 15.12.2009ம் தேதி துவங்கியது.
மங்கம்மா சாலையில் இருந்து தென்காசி அரசு ஆஸ்பத்திரி காம்பவுண்ட் சுவர் வரை மெட்டல் ரோடு போடப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஹவுசிங் போர்டு காலனி வரை ரோடு அமைக்கும் பணி நடக்கவில்லை. மெட்டல் ரோடும் தார் ரோடாக மாற்றப்படும் என கூறப்பட்டது. அதுவும் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கனவாகவே இருக்கிறது.மெட்டல் ரோடு தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. கற்கள் அனைத்தும் பெயர்ந்து பாதசாரிகளின் பாதங்களை பதம் பார்க்கின்றன. வாகனங்களின் டயர்களையும் அவைகள் விட்டு வைப்பதில்லை. இதனால் இவ்வழியே பாதசாரிகள் நடந்து செல்வதில்லை. வாகன ஓட்டிகளும் இச்சாலையோரமாக மண் தரையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒரு சில வீடுகள் உள்ளன. இவற்றில் வசிப்பவர்கள் இச்சாலையால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சர்வீஸ் ரோடாக பயன்பட வேண்டிய சாலை தற்போது சர்வீஸிற்காக ஏங்கி கொண்டிருக்கிறது. இதனை சீரமைத்து தார் சாலையாக அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்ல இவ்வழியே அரசு ஆஸ்பத்திரி, புதிய பஸ்ஸ்டாண்டிற்கும் செல்லும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.