/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சட்டசபை நோக்கி பேரணி: கட்டுமான தொழிலாளர்கள் முடிவுசட்டசபை நோக்கி பேரணி: கட்டுமான தொழிலாளர்கள் முடிவு
சட்டசபை நோக்கி பேரணி: கட்டுமான தொழிலாளர்கள் முடிவு
சட்டசபை நோக்கி பேரணி: கட்டுமான தொழிலாளர்கள் முடிவு
சட்டசபை நோக்கி பேரணி: கட்டுமான தொழிலாளர்கள் முடிவு
ADDED : ஆக 26, 2011 12:22 AM
புதுச்சேரி : தீபாவளி பண்டிகைக்கு ரூ.
2000 வழங்கக் கோரி, சட்டசபை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுமான தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் 2வது மாவட்ட மாநாடு பாகூர் அரிகிருஷ்ணா திருமண நிலையத்தில் நடந்தது. சங்க கவுரவத் தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். சேகர் வரவேற்றார். மா.கம்யூ., பிரதேச செயலாளர் பெருமாள், துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் கலியன் சமர்ப்பித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் ராமசாமி, இணைச் செயலாளர் சிவக்குமார், மா.கம்யூ. பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், முருகையன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில சி.ஐ.டி.யூ., தலைவர் சிங்காரவேலு நிறைவுரையாற்றினார். செல்வராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக நிலவழகன், பொதுச் செயலாளராக கலியன், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட 28 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், கட்டுமானப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். விளைநிலங்களைப் பாதுகாத்திட, சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.2000 அரசு வழங்கிட வலியுறுத்தி, அக்டோபர் 10ம் தேதி சட்டசபை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.