மாவட்டம் முழுவதும் சுதந்திர தினவிழா
மாவட்டம் முழுவதும் சுதந்திர தினவிழா
மாவட்டம் முழுவதும் சுதந்திர தினவிழா
ADDED : ஆக 17, 2011 02:19 AM
திருச்சி: மாவட்டம் முழுவதும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி சிறப்பாக
கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், 65வது
சுதந்திர தினவிழா, கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடந்தது. மாநகர்
மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமை வகித்து, தேசிய கொடியேற்றினார்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக காந்தி, காமராஜ் சிலைக்கு
மாலை அணிவிக்கப்பட்டது.
மாநகர பொருளாளர் மரக்கடை பாரி, சந்தானகிருஷ்ணன், சண்முகம், ராஜகோபால்
ஆகியோர் உள்பட பலர பங்கேற்றனர். * திருச்சி ராகுல் காந்தி நற்பணி மன்றம்
சார்பில், சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள நேருவின்
ரோஜாத் தோட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. தேசியக்
கொடியேற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நற்பணி மன்றத்
தலைவர் ரெக்ஸ், கவுன்சிலர் ஹேமா, வக்கீல் சரவணன், பியோ, ஸ்ரீரங்கம் விச்சு,
நந்தகுமார், ஷீலா செலஸ், காஜா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர்
பங்கேற்றனர். * திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நடந்த சுதந்திர
தினவிழாவில் மாவட்ட தலைவரும், ரெயில்வே கமிட்டி உறுப்பினருமான வக்கீல்
சரவணன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த
நிகழ்ச்சியில் கோட்டத்தலைவர் கதிரேசன் தேசிய கொடியேற்றினார். பார்லிமென்ட்
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஸ் இனிப்பு வழங்கினார். முன்னாள்
கோட்டத்தலைவர்கள் பிச்சுமணி, மதிவாணன், சிவாஜி சண்முகம் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர். * சங்கிலியாண்டபுரம் நியூ ஃபிரண்ட்ஸ் ராக்கர்ஸ் சார்பில்,
ராஜாமணித்தெருவில் சுதந்திர தினவிழா நடந்தது. தினேஷ்குமார் தலைமையில்,
அல்ஃபோன்ஸ்ராஜ் தேசியக் கொடியேற்றினார். மறைந்த முன்னாள் அமைச்சர்
மரியம்பிச்சையின் மகன் மரியம் ஆசிக்மீரா சிறப்பு அழைப்பாளராக கலந்து
கொண்டார். விளையாட்டு, நடனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு
பரிசு வழங்கப்பட்டது. * அகில இந்திய சோனியாகாந்தி விச்சார் மஞ்ச் சார்பில்
நடந்த சுதந்திர தினவிழாவில், பொதுச்செயலாளர் காளிமுத்து தலைமையில், சேவதள
அமைப்பாளர் சார்லஸ் தேசிய கொடியேற்றினார். அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது. நிஜவீரப்பா, ஸ்ரீதர், கண்ணன் ஆகியோர் உள்பட பலர்
பங்கேற்றனர். * ராஜாமணி அம்மால் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் நடந்த சுதந்திர
தினவிழாவில், காவிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராஜாராம் தலைமை
வகித்து, தேசியக் கொடியேற்றினார். தாளாளர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டெல்லா
ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியருக்கு இனிப்பு
வழங்கப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார்
அமைப்புகள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.