/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மணிநேரமும் செயற்கை சுவாசத்தில் வாழும் குழந்தை கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்மணிநேரமும் செயற்கை சுவாசத்தில் வாழும் குழந்தை கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்
மணிநேரமும் செயற்கை சுவாசத்தில் வாழும் குழந்தை கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்
மணிநேரமும் செயற்கை சுவாசத்தில் வாழும் குழந்தை கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்
மணிநேரமும் செயற்கை சுவாசத்தில் வாழும் குழந்தை கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்
ADDED : ஆக 17, 2011 02:18 AM
ஊட்டி : செயற்கை சுவாசம் இல்லாமல் சுவாசிக்க முடியாத குழந்தையின் மருத்துவ செலவுக்கு செய்வதறியாது தவித்து வந்த பெற்றோர், இறுதியாக நீலகிரி மாவட்ட கலெக்டரை நாடியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணார பேட்டையை சேர்ந்தவர் தணிகை குமார். இவரது மகள் ஹரிணி(9). கடந்த 2005ம் ஆண்டு ஹரிணிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இதன் பின், 6 ஆண்டுகள் நலமுடன் இருந்த ஹரிணிக்கு கடந்த பிப்ரவரி மாதம் உடலில் ரத்த அளவு குறைந்து சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. ஹரிணியை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்கு கோவை செல்ல அறிவுறுத்தினர். இதன் பேரில் கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் ஹரிணி சிகிச்சைக்கு அனுப்பட்டார். அங்கு ஹரிணிக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. மேலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஹரிணிக்கு எந்த வகை நோய் என்பதை அறிய முடியவில்லை. எனவே, ஹரிணி நாள்தோறும் செயற்கை சுவாசத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மின்சாரம் மூலம் இயங்க கூடிய ஆக்சிஜன் இயந்திரம் அவர்கள் வீட்டில் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாத போது ஆக்சிஜன் சிலிண்டர் வாடகைக்கு பெற்று சுவாசம் செலுத்தப்படுகிறது.'எலெக்ட்ரீசியன்' வேலை செய்து வரும் தணிகை குமார் தனது மகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க (ஆக்ஸிஜன்)மாதந்தோறும் 6,500 ரூபாய் வரை செலவழிக்கிறார். சொற்ப வருமானம் கிடைத்து வரும் இந்த தொழில் மூலம் மகளின் மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வருவதால், நீலகிரி மாவட்ட நிர்வாகம் தனக்கு உதவ வேண்டும் என கடந்த ஜூன் மாதம் மனு அளித்தார்.நீலகிரி மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறை இணை இயக்குநரிடம் ஹரிணியின் சிகிச்சைக்கு பரிந்துரைத்தது. ஆனால், சுகாதார துறையினர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஊட்டியின் கடுங்குளிரில் இந்த குழந்தையை காப்பாற்ற அந்த பெற்றோர்கள் தூக்கம் மறந்து, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பொருளாதார நிலை அவர்களை பெரும் துயருக்கு ஆட்படுத்தி உள்ளது. இதனால், நேற்று மீண்டும் நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் தணிகை குமார், ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வாழும் தனது குழந்தை மற்றும் குடும்பத்தாருடன் வந்து மனு அளித்தார். குழந்தையை நேரில் பார்த்து, மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், 'சிறுமிக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதி அளித்தார். 'எந்த நோயால் தனது மகள் பாதிக்கப்பட்டுள்ளார்,' என அறிய முடியாமல் தவித்து வரும் தணிகை குமாரின் மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவு முன்வருபவர்கள் 99767-57222 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்